தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image

உதகை மலை ரயில்(கோப்புப் படம்).

Updated On :22 ஜூலை 2024, 6:11 am

தண்டவாளத்தில் மரம் விழுந்ததால் உதகை - குன்னூர் இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது.

இருப்பினும், தற்போது தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உதகை, கூடலூா், பந்தலூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் அருவங்காடு பகுதியில் மரம் தண்டவாளத்தில் விழுந்ததால் உதகை-குன்னூர் இடையே மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது. உதகையில் நேற்றிரவு முதல் சூறாவளி காற்று வீசி வருவதால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.