தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

பெண்கள், சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு!

பெண்கள், சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

News image

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Updated On :23 ஜூலை 2024, 1:42 pm

பெண்களுக்கான வளர்ச்சியை மேம்படுத்த, பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகளின் நலனுக்கான திட்டங்களுக்காக ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரானன் கூறுகையில், “மக்களவையில் 2024-25ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த சீதாராமன், இது பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, பட்ஜெட்டில் பெண்கள் மற்றும் சிறுமிகள் பயன்பெறும் திட்டங்களுக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலை செய்யும் பெண்களின் பங்களிப்பை ஊக்குவிக்க அரசு சார்பில் பணிபுரியும் பெண்கள் விடுதிகள் அமைக்கப்படும்.

பட்ஜெட்டின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று, பணிபுரியும் தாய்மார்களுக்கு ஆதரவாக தொழில்துறைகளில் பணிபுரியும் பெண்கள் விடுதிகளை நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

இந்த முன்முயற்சிகள் பெண்களுக்கான வேலை, வீடு சமநிலையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

கூடுதலாக, பெண் பணியாளர்களின் பங்கேற்பை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட பெண்கள் சார்ந்த திறன் திட்டங்களை இந்த பட்ஜெட் கோடிட்டுக் காட்டுகிறது” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.