1991 பட்ஜெட்.. நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது: கார்கே

கோடிக்கணக்கானவர்களை வறுமையில் இருந்த மீட்ட பட்ஜெட் என்று கார்கே பெருமிதம்.
மல்லிகார்ஜுன கார்கே
மல்லிகார்ஜுன கார்கே கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

கடந்த 1991ஆம் ஆண்டு நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தியது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

2024-25ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டை எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இந்நிலையில், 1991ஆம் ஆண்டு ஜூலை மாதம் தாக்கல் செய்த பட்ஜெட்டை நினைவுகூர்ந்து மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மல்லிகார்ஜுன கார்கே
ராகுல் காந்தியுடன் விவசாய சங்க தலைவர்கள் இன்று சந்திப்பு!

அந்த பதிவில் அவர் கூறியதாவது:

“ஜூலை 1991ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் பி.வி.நரசிம்ம ராவ் தலைமையில், நிதியமைச்சர் மன்மோகன் தாக்கல் செய்த பட்ஜெட், தாராளமயமாக்கல் பட்ஜெட்டாக, இந்திய வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாக அமைந்தது. பொருளாதார சீர்திருத்தங்களின் புதிய சகாப்தத்தை தொடங்கினார்கள்.

இந்த தொலைநோக்கு நடவடிக்கை, நாட்டில் புரட்சியை ஏற்படுத்தி, நடுத்தர வர்க்கத்தை மேம்படுத்தியது. கோடிக்கணக்கானவர்களை வறுமையில் இருந்து மீட்டது.

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையைத் தூண்டி, முன்னேற்றம் மற்றும் செழிப்புக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் இந்த அற்புதமான சாதனையில் காங்கிரஸ் கட்சி பெருமிதம் கொள்கிறது.

மீண்டும் ஒருமுறை நடுத்தர வர்க்கத்தினருக்கும், பின்தங்கிய மக்களுக்கும் உதவும் வகையில், இரண்டாம் தலைமுறையினரின் சீர்திருத்தங்களுக்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பட்ஜெட்டை விமர்சித்திருந்த கார்கே, காங்கிரஸின் தேர்தல் அறிக்கையை நகலெடுத்துள்ளதாகவும், அதைகூட ஒழுங்காக செய்யவில்லை என்றும், ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவதற்கான பட்ஜெட்டாக இருப்பதாகவும் விமர்சித்திருந்தார்.

தொடர்ந்து, நேற்று இரவு நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில், பட்ஜெட்டுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com