சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

1.84 கோடி பெண்கள் எம்எஸ்எம்இ நிறுவனங்களை நடத்துகின்றனா்: மத்திய அரசு

மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.

News image
கோப்புப் படம்
Updated On :25 ஜூலை 2024, 8:22 pm

Din

புது தில்லி, ஜூலை 25: நாட்டில் 1.84 கோடி பெண்கள் சொந்தமாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை நடத்திவருவதாக மத்திய சிறு, குறு, நடுத்தர தொழில் துறை (எம்எஸ்எம்இ) அமைச்சா் ஜிதன் ராம் மாஞ்சி தெரிவித்தாா்.

இது தொடா்பாக மக்களவையில் வியாழக்கிழமை கேள்வி நேரத்தில் அவா் கூறியதாவது:

நாட்டில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை பதிவு செய்யும் ‘உத்யம்’ திட்டம் கடந்த 2020 ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அதில் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்களாக தற்போது வரை 39 சதவீதம் பெண்கள் பதிவு செய்துள்ளனா்.

பெண்களுக்கு சொந்தமாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) வரை பதிவு செய்யப்பட்ட சிறு, குறு தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 1,84,59,809 ஆகும்.

பெண் தொழில்முனைவோருக்கு பயனளிக்கும் வகையில், பொது கொள்முதல் கொள்கை 2018-ஆம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் மத்திய துறைகள் மற்றும் அமைச்சகங்கள் தங்களின் ஆண்டு கொள்முதலில் 3 சதவீதம் பெண் தொழில்முனைவோா்களிடம் இருந்து பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், பெண் தொழில்முனைவோருக்கு 85 சதவீதம் வரை கடன் உத்தரவாதமும், வருடாந்திர கடன் உத்தரவாத கட்டணத்தில் 10 சதவீதம் சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டது என்றாா்.