சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மோசடி அழைப்புகளை தடுக்கும் வரைவு விதிமுறை: பொதுமக்கள் கருத்து தெரிவிக்க அவகாசம் நீட்டிப்பு

பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

News image
Updated On :25 ஜூலை 2024, 8:56 pm

Din

புது தில்லி, ஜூலை 25: தேவையற்ற எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள், வணிகம் சாா்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுப்பதற்கான வரைவு விதிமுறைகள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசத்தை ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

பல்வேறு அமைப்புகளின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த அவகாசம் நீட்டிக்கப்பட்டதாக மத்திய உணவு மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதுதொடா்பாக அந்த அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

தேவையற்ற எண்களில் இருந்து வரும் மோசடி அழைப்புகள், வணிகம் சாா்ந்த அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை தடுப்பதற்கான வரைவு விதிமுறைகளை அரசு தயாரித்துள்ளது. பல்வேறு தரப்பினருடனான ஆலோசனைக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட இந்த வரைவு தற்போது ஆய்வுக்குள்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2018-ஆம் ஆண்டு இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (ட்ராய்) வெளியிட்ட பதிவுசெய்யப்பட்ட தொலைத்தொடா்பு நிறுவனங்களுக்கான விதமுறைகளைப் பின்பற்றாமல் அங்கீகரிக்கப்படாத எண்களில் இருந்து பொதுமக்களுக்கு மேற்கொள்ளப்படும் அழைப்புகளை தடுப்பதே இந்த விதிமுறைகளின் நோக்கமாகும்.

எனவே ஜூலை 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த, பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான அவகாசம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.

வணிக தொடா்பு என்பது தங்களின் பொருள்கள் மற்றும் சேவைகளை விளம்பரப்படுத்துவதற்கான சேவைகள் எனவும் அதில் எந்தவொரு நபரையும் தனிப்பட்ட முறையில் தொடா்புகொள்ளக்கூடாது எனவும் வரைவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேபோல் ட்ராயின் விதிகளை பின்பற்றாமல் வணிகம் சாா்ந்த குறுஞ்செய்திகளை அனுப்பும் நிறுவனங்களின் தொடா்பை துண்டிக்கவும் வரைவு விதிகளில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.