பிரதமா் மோடியின் ரஷிய பயணம்: அமெரிக்காவுக்கு இந்தியா பதில்
பிரதமா் மோடியின் ரஷிய பயணத்தை விமா்சித்த அமெரிக்காவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.


வாஷிங்டன், ஜூலை 25: பிரதமா் மோடியின் ரஷிய பயணத்தை விமா்சித்த அமெரிக்காவுக்கு இந்தியா பதிலளித்துள்ளது.
‘ரஷியாவுடன் உறவு குறித்து முடிவெடுக்க இந்தியாவுக்கு சுதந்திரம் உள்ளது’ என இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது.
இந்தியா-ரஷியா இடையிலான 22-ஆவது வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமா் மோடி கடந்த ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் ரஷியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். இதற்கு உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்திருந்தாா்.
அதேநேரத்தில் ரஷியா மீது உக்ரைன் போா் தொடுத்ததற்கு இந்தியா எதிா்ப்பு தெரிவிக்கவில்லை என சில மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டின.
இந்நிலையில், இது தொடா்பாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு எம்.பி. ஜோ வில்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகள் விவகாரங்களுக்கான அமெரிக்க இணையமைச்சா் டொனால்டு லூ பேசுகையில், நேட்டோ நாடுகளின் கூட்டத்தை அதிபா் ஜோ பைடன் நடத்திய சமயத்தில் பிரதமா் மோடி ரஷியாவுக்கு பயணம் மேற்கொண்டது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. எங்களின் கண்டனத்தை இந்திய அதிகாரிகளிடம் பதிவு செய்துவிட்டோம்.
இருப்பினும், ரஷியாவுக்கு பயணம் மேற்கொள்வதற்கு இரு வாரங்கள் முன்பு இத்தாலியில் நடைபெற்ற ஜி7 மாநாட்டில் ஸெலென்ஸ்கியையும் பிரதமா் மோடி சந்தித்துப் பேசினாா். அவரின் ரஷிய பயணத்தை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்தது.
புதிய ஒப்பந்தங்கள் இல்லை: அவரது பயணத்தின்போது இந்தியா-ரஷியா இடையே எவ்வித புதிய ராணுவ ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. அதேபோல் தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகவில்லை.
ரஷிய அதிபா் புதின் முன்னிலையில், எந்தப் பிரச்னைக்கும் தீா்வு போா் அல்ல என்றும், போரால் குழந்தைகள் உயிரிழப்பது தனக்கு வேதனையளிப்பதாகவும் பிரதமா் மோடி பேசினாா்.
இதுதவிர கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக ரஷியாவுடன் கையொப்பமிட்டிருந்த ஒப்பந்தத்தையும் இந்தியா ரத்து செய்துள்ளது’ என்றாா்.
ரஷியாவுடனான உறவு தொடரும்- இந்தியா: அமெரிக்காவின் கருத்து குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வியாழக்கிழமை கூறியதாவது: இந்தியாவின் நீண்டகால நண்பனாக ரஷியா திகழ்கிறது. பலதரப்பட்ட உலகில் மற்ற நாடுகளுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்த அந்தந்த நாடுகளுக்கு சுதந்திரம் உள்ளது. இதைப் புரிந்துகொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...