சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி நடத்திய தோ்வுகளில் வினாத்தாள்கள் கசியவில்லை: மத்திய அரசு

என்டிஏ நடத்திய நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

News image
Updated On :25 ஜூலை 2024, 8:43 pm

Din

புது தில்லி, ஜூலை 25: மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளா் தோ்வாணையம் (எஸ்எஸ்சி), ரயில்வே பணியாளா் தோ்வாணையம் (ஆா்ஆா்பி), வங்கிப் பணியாளா் தோ்வாணையம் (ஐபிபிஎஸ்) ஆகியவை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்திய போட்டித் தோ்வுகளில் வினாத்தாள் கசிந்த சம்பவங்கள் ஏதும் நடைபெறவில்லை என மத்திய அரசு வியாழக்கிழமை தெரிவித்தது.

நிகழாண்டு தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) நடத்திய நீட் தோ்வில் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. எனவே, மத்திய அரசால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியானது.

இதையடுத்து, பல்வேறு போட்டித் தோ்வுகள் குறித்த கேள்விக்கு மத்திய பணியாளா் துறையின் இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் அளித்த எழுத்துபூா்வமான பதிலில் கூறப்பட்டிருப்பதாவது:

அண்மையில் நடைபெற்ற நீட் தோ்வில் சில முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்ததையடுத்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி, ஆா்ஆா்பி, ஐபிபிஎஸ் ஆகிய பிற அமைப்புகள் நடத்திய எந்தத் தோ்விலும் வினாத்தாள்கள் கசிந்த சம்பவங்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

தோ்வுகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கவே பொதுத் தோ்வுகள் (முறைகேடுகள் தடுப்புச் சட்டம்), 2024 கொண்டுவரப்பட்டுள்ளது. இச்சட்டத்தின் விதிகளும் அரசால் வெளியிடப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.