
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலங்களவையில் இன்று (ஜூலை 26) மத்திய பட்ஜெட் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் விவாதங்களைக் கேட்க மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மறுப்பதாகக் கூறி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விவாதத்தில் பங்கேற்ற காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கரின் செயல் ஏற்கத்தக்கதாக இல்லையென கூறினார்.
அதாவது, ``முக்கிய அலுவல்கள் இருந்தால் வேறொரு நாளில் விவாதத்தை வைத்துக்கொள்ள அனுமதி வழங்கலாம். ஆனால், எதற்காக முற்றிலும் நிகாரிக்கிறார்கள்?” என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்புகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.