ரயில்வே வளாகத்தில் எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதல் காரணங்களுக்காக தனிநபர்களிடமிருந்து அபராதமாக ரூ.5.13 கோடியை இந்திய ரயில்வே வசூல் செய்துள்ளது.
மாநிலங்களைவையில் நேற்று (ஜூலை 26) பேசிய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் எச்சில் துப்புதல் மற்றும் குப்பை கொட்டுதல் காரணங்களுக்காக தனிநபர்களிடமிருந்து கடந்த இரு நிதியாண்டுகளில் மட்டும் ரூ.5.13 கோடி வரை வசூலிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
”நாடு முழுவதும் ரயில்வே வளாகத்தில் சுகாதார விதிமுறைகளை மீறியதாக கடந்த இரு நிதியாண்டுகளில் பிடிபட்ட 3,30,132 பேரிடம் இருந்து இந்த அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. சுத்தம் செய்வதில் ரயில்வே நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டாலும், சுகாதாரத்தைத் தொடர்ந்து பேணுவது சவாலாக உள்ளது. தூய்மை என்பது தொடர்ச்சியான செயல்பாடு. ரயில்வே வளாகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அமைச்சர் தெரிவித்தார்.
சுத்தமின்மை தொடர்பான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் அபராதத் தொகையை உயர்த்துவது குறித்து தற்போது எந்தத் திட்டமும் இல்லை என்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ரயில்வே நிர்வாகம் தற்போதுள்ள விதிகளை ஒழுங்குபடுத்தி, தூய்மை குறித்தப் பிரசாரங்களைத் தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்லவிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இந்திய ரயில்வேயின் பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்புப் படையில் (ஆர்பிஎஃப்) மொத்தமுள்ள 63,051 பேரில் 5,900 பெண்கள் பணியாற்றி வருகின்றனர். இது மொத்தமுள்ள வீரர்களில் 9.36% ஆகும்.
மேலும் பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 4,660 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகவும், ஆர்பிஎஃப் வீரர்கள் பணியாற்றும் 750 ரயில் நிலையங்களில் பெரும்பாலும் பெண்களைப் பணியில் அமர்த்தியிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2023-24 நிதியாண்டில் முன்பதிவு செய்யபட்ட பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளில் 36% பெண்கள் பயணிப்பதாகத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
இதனைத் தொடர்ந்து, பெண் பயணிகளின் பாதுகாப்புக்காகத் தொடங்கப்பட்ட ‘மேரி சஹேலி’ திட்டத்தில், 245 குழுக்கள் மூலம் 700 பெண் பாதுகாப்புப் படை வீரர்கள் தினசரி பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நடப்பு நிதியாண்டில் இந்திய ஐ.டி. துறை வருவாய் 31,500 கோடி டாலா் -நாஸ்காம் கணிப்பு

பாதுகாப்பும் பயணமும்...

தெற்கு ரயில்வே சரக்கு முனையங்களில் வருவாய் ஈட்டல்

இருகூா் - போத்தனூா் இடையே ரூ.277.42 கோடி மதிப்பீட்டில் இருவழி ரயில்பாதை அமைக்க ஒப்புதல்
வீடியோக்கள்

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

