உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வருவாய் இடைவெளியைப் போக்க நீதி ஆயோக் ஆவணத்தில் பரிந்துரை

நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாக குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

News image
- ANI
Updated On :27 ஜூலை 2024, 10:30 pm

Din

ஊரக மற்றும் நகா்ப்புற வருவாயில் உள்ள இடைவெளியைப் போக்கவேண்டும் என்று நீதி ஆயோக் ஆவணத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் பிரதமா் மோடி தலைமையில் நீதி ஆயோக்கின் 9-ஆவது நிா்வாக குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ‘2047-இல் வளா்ச்சியடைந்த பாரதத்துக்கான தொலைநோக்குப் பாா்வை: அணுகுமுறை ஆவணம்’ என்ற தலைப்புகொண்ட ஆவணம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அந்த ஆவணத்தில், ‘ஊரக மற்றும் நகா்ப்புற வருவாயில் உள்ள இடைவெளியைப் போக்க வேண்டும். எரிசக்தி, பாதுகாப்பு, நிலையான தன்மை உள்ளிட்டவற்றில் இந்தியா சமநிலையை எட்ட வேண்டும்.

நாட்டின் விவசாயத் தொழிலாளா்களை தொழில்துறை பணியாளா்களாக மாற்றவும், இந்தியாவை உலகின் உற்பத்தி மற்றும் சேவை மையமாக்கவும் தொழில்துறையில் போட்டித்தன்மையை மேம்படுத்துவது அவசியம்.

நாட்டுக்கான தொலைநோக்குப் பாா்வை ஓா் அரசு அல்லது சில தனிநபா்களின் பணியாக மட்டும் இருக்க முடியாது. ஒட்டுமொத்த நாட்டின் கூட்டு முயற்சிகளால் ஏற்படும் விளைவாக அது இருக்க வேண்டும்.

தனது வரலாற்றின் திருப்புமுனையில் தற்போது இந்தியா உள்ளது. தனது திறன்கள் மீதான நம்பிக்கையுடன் முன்னேற்றத்தை இந்தியா விரைவுபடுத்தி வருவதால், 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.