திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

திருமணம் செய்யாமலே இணைந்து வாழும் முறைக்கு தடை விதிக்க கோரிக்கை!

லிவ்-இன்-டுகெதர் உறவு முறையில் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ தடை விதிக்க வேண்டும்..

News image
Updated On :28 ஜூலை 2024, 11:27 pm IST

திருமணம் செய்யாமலே ஆணும் பெண்ணும் லிவ்-இன்-டுகெதர் முறையில் இணைந்து வாழும் முறையை தடை செய்ய ஹரியாணாவில் நடைபெற்ற 300 கிராமங்களின் பஞ்சாயத்து தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஹரியாணாவின் ஜிந்த் பகுதியில் இன்று(ஜூலை 28) ஹரியாணா மட்டுமன்றி, உத்தர பிரதேசம், குஜராத், தில்லி, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களிருந்து சுமார் 300 பஞ்சாயத்து ஒன்று திரண்டு முக்கிய விவாதக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப்பின், கூட்டத்துக்கு தலைமையேற்ற ரகுபிர் நைன் செய்தியாளர்களுடன் பேசியதாவது, “நாங்கள் யாரும் காதல் திருமணத்துக்கு எதிராக இல்லை. மாறாக, அதில் பெற்றோர்களின் சம்மதம் மிக முக்கியம் என்பதை வலியுறுத்துகிறோம்.

ஒரே கோத்ரத்தை சார்ந்தவர்கள் (பாரம்பரியமாக ஒரே வம்சத்தை சார்ந்தவர்கள்) திருமணம் செய்வதை தடை செய்ய வேண்டும். லிவ்-இன்-உறவு முறைகள், ஒரே பாலின திருமணங்கள் ஆகியவற்றுக்கும் கட்டாயம் தடை விதிக்க வேண்டும்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து விவாதிப்போம். எதிர்க்கட்சித் தலைவரையும் சந்தித்து இவ்விவகாரங்களில் நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு அழுத்தம் தர வலியுறுத்த உள்ளோம்.

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

லிவ்-இன்-உறவு முறைகளால் குடும்பங்கள் பிரிந்துவிடுவதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ள பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான சந்தோஷ் தாஹியா, சட்டம் இத்தகைய வாழ்வியல் முறைக்கு அனுமதியளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுப் பேசியுள்ளார். ”ஒரே வம்ச கோத்ரத்தில் திருமணம் செய்வதால் சமூக கட்டமைப்பு சிதைவதாகவும், இதன் காரணமாக, மரபணு சார் பிரச்னைகள் உள்ளதாகவும்” அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரே கோத்ரத்தில் திருமணம் செய்வதை கட்டாயம் தடை செய்ய வலியுறுத்தியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.