

மத்தியப் பிரதேசத்தில் சிறுமி மர்மமான உயிரிழந்த சம்பவ வழக்கில், மூன்று மாதங்களுக்கு பிறகான விசாரணையில் திடுக்கிடும் உண்மை வெளிவந்துள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ரேவா பகுதியில் 9 வயது சிறுமி கடந்த ஏப்ரல் மாதம் 24ஆம் தேதியில் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார். இந்த சம்பவத்தினைத் தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.
சிறுமியின் குடும்பத்தினர் உள்பட சுமார் 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சிறுமியின் குடும்பத்தினரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஒவ்வொருவரும் முன்னுக்குப் பின்னாக முரணான பதிலளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், விசாரணையை பலப்படுத்தி மேற்கொண்டதில், சிறுமியின் 13 வயதான சகோதரர்தான் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கொலை செய்தது தெரிய வந்தது.
காவல்துறை கண்காணிப்பாளர் விவேக் சிங் தெரிவித்ததாவது, சிறுமியின் சகோதரர் இரவில் மொபைல் போனில் ஆபாசப் படத்தைப் பார்த்துவிட்டு, அருகிலிருந்த தனது தங்கையை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை தந்தையிடம் கூறப்போவதாக சிறுமி கூறியுள்ளார்.
இதனால், பயமுற்ற சிறுவன் தனது தங்கையின் கழுத்தை நெரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுவன் தனது தாயிடம் சென்று, நடந்தவற்றைக் கூறியுள்ளான்.
சிறுவனின் தாயும், மற்ற இரு சகோதரிகளும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட தங்கை இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்து, சிறுவனின் தாய் சிறுமியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரிடம், ``இரவில் சிறுமி தனியாக தூங்கிக் கொண்டிருந்தார்; இரவில் சத்தம் எதுவும் கேட்கவில்லை.
ஒருவேளை விஷப் பூச்சி ஏதேனும் கடித்ததால், சிறுமி உயிரிழந்திருக்கலாம்’’ என்று சிறுமியின் தாய் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.