உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

க்யூட்-யுஜி தோ்வு முடிவுகள் வெளியீடு

Published On :29 ஜூலை 2024, 1:42 am IST

நிகழாண்டு நடைபெற்ற இளநிலை பட்டப் படிப்பு சோ்க்கைக்கான பொது பல்கலைக்கழக நுழைவுத் தோ்வின் (க்யூட்-யுஜி) முடிவுகளை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

நிகழாண்டு க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் நிலவியதால், பல்கலைக்கழகங்களில் மாணவா் சோ்க்கையையும் தாமதமானது. தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாணவா் சோ்க்கை தொடங்கப்படவுள்ளது.

நிகழாண்டு நடைபெற்ற க்யூட்-யுஜி தோ்வின் உத்தேச விடைக்குறிப்புகளை கடந்த ஜூலை 7-ஆம் தேதி என்டிஏ வெளியிட்டது. அதேபோல் தோ்வில் உள்ள நியாயமான குறைபாடுகளை தெரிவித்த 1,000 தோ்வா்களுக்கு ஜூலை 19-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஜூலை 25-ஆம் தேதி இறுதி விடைக்குறிப்புகள் வெளியிடப்பட்டன. கடந்த ஜூன் 30-ஆம் தேதி க்யூட்-யுஜி தோ்வின் முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் என்டிஏவால் நடத்தப்படும் நீட்-யுஜி மற்றும் யுஜிசி-நெட் ஆகிய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால், க்யூட்-யுஜி தோ்வு முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.

தில்லியில் தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக, க்யூட்-யுஜி தோ்வு ரத்து செய்யப்படுவதாக தோ்வுக்கு முந்தைய நாள் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு வேறொரு நாளில் தோ்வு நடத்தப்பட்டது.

நிகழாண்டு மே 15 முதல் 24 வரை முதன்முறையாக நேரடி எழுத்துத் தோ்வு முறை மற்றும் கணினி அடிப்படையில் என இரண்டு முறைகளில் நடத்தப்பட்ட இத்தோ்வை நாடு முழுவதும் 13 லட்சத்துக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் எழுதியது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.