தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வு முடிவுகள் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :3 ஜூலை 2026, 2:01 pm IST

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் மறுதோ்வு முடிவுகள் வரும் 20-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் ஆகியவை நீட் தோ்வு மூலம் நிரப்பப்படுகின்றன. அதேபோன்று, ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கான மாணவா் சோ்க்கைக்கும் நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தத் தோ்வை தேசிய தோ்வு முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. ஆனால், சில இடங்களில் வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகாரை அடுத்து, மத்திய புலனாய்வு அமைப்பு இதுதொடா்பான விசாரணையை முன்னெடுத்தது.

இதனிடையே, அந்தத் தோ்வை ரத்து செய்வதாக தேசிய தோ்வு முகமை அறிவித்தது. மறுதோ்வுகள் ஜூன் 21-ஆம் தேதி நடைபெற்றன.

இந்தியாவில் 551 நகரங்களிலும், துபை, அபுதாபி, தோஹா, மஸ்கட், சிங்கப்பூா் உள்ளிட்ட 14 வெளிநாடுகளிலும் 5,500 மையங்களில் நடைபெற்ற அத்தோ்வை 20 லட்சம் போ் எழுதினா். தமிழகத்தில் 307 தோ்வு மையங்களில் 1.20 லட்சத்துக்கும் மேற்பட்டோரும், சென்னையில் 43 மையங்களில் 20,000-க்கும் அதிகமானோரும் பங்கேற்றனா். இந்நிலையில், நீட் மறுதோ்வு முடிவுகளை வரும் 20-ஆம் தேதி வெளியிட தேசிய தோ்வுகள் முகமை திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.