எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

வெளிநாடுகளில் உயிரிழந்த 633 இந்திய மாணவர்கள்!

கடந்த 5 ஆண்டுகளில் வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்கள் குறித்த விவரங்கள் மக்களவையில் சமர்ப்பிப்பு

News image
கோப்புப் படம்
Updated On :29 ஜூலை 2024, 2:17 pm

DIN

வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்கள் குறித்த தகவல்களை மத்திய இணையமைச்சர் மக்களவையில் சமர்ப்பித்தார்.

புது தில்லியில் இன்று (ஜூலை 29) நடந்த மக்களவைக் கூட்டத்தொடரில், வெளிநாடுகளில் கடந்த 5 ஆண்டுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களைத் தெரிவிக்குமாறு கேரள காங்கிரஸ் எம்.பி. கொடிக்குன்னில் சுரேஷ் கேள்வி எழுப்பினார்.

அவரின் கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்திவர்தன் சிங், வெளிநாடுகளில் உயிரிழந்த இந்திய மாணவர்களின் விவரங்களை சமர்ப்பித்தார்.

2019 முதல் 2024 வரையிலான கடந்த 5 ஆண்டுகளில், விபத்துக்கள் மற்றும் வன்முறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 633 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர்.

அவற்றில் அதிக எண்ணிக்கையிலாக கனடாவில் 172 பேரும், அமெரிக்காவில் 108 ஆகவும் உள்ளது. அடுத்ததாக, இங்கிலாந்தில் 58 பேரும், ஆஸ்திரேலியாவில் 57 பேரும், ரஷ்யாவில் 37 பேரும், ஜெர்மனியில் 24 பேரும், பாகிஸ்தானில் ஒருவர் என மொத்தம் 41 நாடுகளில் இந்திய மாணவர்களின் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும், ஏற்பட்ட உயிரிழப்புகளில் தாக்குதல்கள் மூலம் 19 பேர் உயிரிழந்துள்ளனர்; கனடாவில் 9 பேர், அமெரிக்காவில் 6 பேர், ஆஸ்திரேலியாவில் ஒருவர், சீனாவில் ஒருவர், இங்கிலாந்தில் ஒருவர் மற்றும் கிர்கிஸ்தானில் ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை இந்தியத் தூதரகங்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.