சீனாவின் ஜிடிபி இந்தியாவைவிட 6 மடங்கு அதிகம்! இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி

சீனாவுடன் போட்டியிட இந்தியாவால் முடியுமா? இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தி என்ன சொல்லியிருக்கிறார்?
நாராயண மூர்த்தி
நாராயண மூர்த்திகோப்புப்படம் | ஏஎன்ஐ
Published on
Updated on
1 min read

மின்னணு நகர தொழில்நிறுவனங்களின் கூட்டமைப்பின்(எல்சியா) முதல் மாநாடு பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை(ஜூலை 26) நடைபெற்றது.

‘எல்சியா தொழில்நுட்ப மாநாடு 2024இல்’ கலந்துகொண்டு பேசிய இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, சீனாவுடன் போட்டியிடும் வல்லமை இந்தியாவுக்கு இருக்கிறதா? என்ற வலுத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவிக்கும் கருத்துகள் பல விவாதப்பொருளாக மாறி வருவது வழக்கமான ஒன்றாக உள்ளது. அந்த வகையில், ‘தயாரிப்பு, உற்பத்தி துறையில்’ வல்லமை பொருந்திய நாடாக திகழும் சீனாவுடன் போட்டியிடுவது, இந்தியாவுக்கான கடும் சவால் என்பது அவரது சமீபத்திய பேச்சில் வெளிப்பட்டுள்ளது.

எல்சியா தொழில்நுட்ப மாநாட்டில் நாராயண மூர்த்தி பேசியதாவது, “அரசின் ஈடுபாடும் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையேயன உறவில் மேம்பாடு ஆகியவையே, மேற்கண்ட துறையில், நம் தேசம் மேலும் வளர்ச்சியடைய முக்கிய பங்காற்றும்.”

“சீனா ஏற்கெனவே உலக தொழிற்சாலையாக மாறிவிட்டது. சீனாவின் உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி) இந்தியாவைவிட 6 மடங்கு அதிகமாக உள்ளது.உலகின் பிற நாடுகளில் சூப்பர்மார்க்கெட்கள் போன்ற வணிக வளாகங்களில் விற்பனைகாக உள்ள சுமார் 90 சதவிகித பொருள்கள் சீனாவில் தயாரிக்கப்பட்டவையே.”

இந்த நிலையில், உலகின் தயாரிப்பு மையமாக இந்தியா மாறும் எனக் குறிப்பிடுவது அதீதநம்பிக்கை மிகுந்த வார்த்தைகளாகவே பார்க்க வேண்டுமெனக் குறிப்பிட்டுள்ளார்.

இருநாட்டு பொருளாதார திறனை ஒப்பிட்டுப் பேசியிருப்பதன் மூலம், சீனாவின் திறனை மிஞ்சும் அளவுக்கு இந்தியா கடினமாக உழைக்க வேண்டியதன் அவசியத்தை நாராயணமூர்த்தி வலியுறுத்தியுள்ளார்.

நாராயண மூர்த்தி
மகாராஷ்டிர வனத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அமெரிக்க பெண்! தமிழக முகவரியில் ஆதார் அட்டை!!

“இந்தியாவில் ஐடி துறை பெரும்பாலும் ஏற்றுமதியை சார்ந்தே உள்ளது. உற்பத்தி துறை, உள்நாட்டு பங்களிப்பையும் அரசின் ஆதரவையும் பெருமளவில் நம்பி செயல்பட்டு வருகிறது.”

“இந்தியா போன்றதொரு தேசத்தில், ‘பொது நிர்வாகம்’ மேலும் மேம்பாடு அடையவேண்டியுள்ளது. அதிலும் குறிப்பாக, பொது நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்றல், வேகம், திறன் ஆகியவை மேம்பட வேண்டும்.”

“உற்பத்தி துறையில் எதிர்பார்த்த வளர்ச்சியடைய, அரசுக்கும் தொழில்துறைக்கும் இடையேயான இடைவெளி தளத்தைக் குறைப்பது மிகவும் அவசியம்.”

அத்துடன், தொழில்முனைவோருக்கான ஆலோசனைகளையும் வழங்கியுள்ள அவர், அசுர வளர்ச்சியடைந்து கோலோச்சி வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்(ஏஐ), வடிவமைப்பாளர்களுக்கும் தனி மனிதர்களுக்கும் மாற்றாக அமையாது என நம்பிக்கையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பெருமளவிலான செயல்பாட்டு அமைப்புகளை நிறுவுவதில் மனிதர்கள் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பத்தால் ஈடுகொடுக்க இயலாது என்றும், மனித மனதின் ஆற்றலும் சிந்தனைத் திறனும் மேற்கண்ட அமைப்பை விட மேம்பட்டதாக விளங்குவதாய் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளார்.

நாராயண மூர்த்தி
10 அடி அறைக்கு 15,000 வாடகை... ஐஏஎஸ் தேர்வர்களுக்கு டிஎஸ்பி அறிவுரை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com