வயநாடு சுற்றுலா சென்ற தமிழர்களுக்கு உதவி எண் அறிவிப்பு!
தமிழகத்தில் இருந்து சுற்றுலாச் சென்றவர்கள் தொடர்பாக தமிழக அரசு உதவி எண்ணை அறிவித்துள்ளது.
கேரள மாநிலத்தின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 84ஆக அதிகரித்துள்ளதாக மாநில வருவாய்த் துறை தெரிவித்துள்ளது. மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது.
இந்த நிலையில் வயநாட்டிற்கு தமிழகத்திலிருந்து சுற்றுலா சென்றவர்களுக்கு தமிழக அரசு உதவ எண்ணை அறிவித்துள்ளது.
1070 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைத் தெரிவிக்கலாம் என மாநில அவசர கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

