கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கேரள நிலச்சரிவு: முண்டக்கைப் பகுதியை 13 மணி நேரத்துக்குப் பின் அடைந்த என்டிஆர்எஃப்

கேரள நிலச்சரிவு மீட்புப் பணியை உடைந்த பாலங்களும், தொடர்ந்து கனமழை பெய்வதும் சவாலாக்கியுள்ளன.

News image

கேரள நிலச்சரிவு - PTI

Updated On :30 ஜூலை 2024, 12:19 pm

கேரள நிலச்சரிவு மீட்புப் பணிகளை உடைந்த பாலங்களும் இடைநில்லாமல் பெய்யும் மழையும் சவாலாக்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாலங்கள் ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டதால், முண்டக்கைப் பகுதிக்கு 13 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சென்றடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், முண்டகை மற்றும் சூரல்மலா பகுதிகளில் இருந்த பாலங்களில் உடைப்பு ஏற்பட்டு, மீட்புப் படையினர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

வயநாடு மாவட்டதில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்கு சேறும் சகதியுமாக உள்ளது. இதனால், அவ்விடம் ஒரு நிலையற்ற தன்மையோடு இருப்பது, பெரும் சிக்கலாக உள்ளதாக தேசயி பேரிடர் மேலாண்மை அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதாவது, இவ்விரு பாலங்களும் உடைந்திருப்பதால், பேரிடர் மேலாண்மைக் குழுவினர் சம்பவ இடத்துக்குள் செல்வது சவாலாக மாறியது. ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், அதனைக் கடப்பதும் சவாலாக இருந்தது.

இந்த நிலையில், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் பகுதிகளில், மக்களை கயிறு கட்டி வெளியே மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள். முண்டக்கைப் பகுதியில் மீட்கப்படும் மக்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் பணிகளும் தயாராக உள்ளன.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில், இன்று அதிகாலை நேரிட்ட நிலச்சரிவு சம்பவத்தில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

கிட்டத்தட்ட 400 - 500 வீடுகள் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. இந்த நிலச்சரிவால் சுமார் 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.