மாலத்தீவுக்கு மீண்டும் தொடங்கியதா பயணங்கள்?

உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், மாலத்தீவுக்கு மீண்டும் சுற்றுலா திட்டங்கள் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியான நிலையில்..
மாலத்தீவு
மாலத்தீவு
Published on
Updated on
1 min read

இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் எழுந்ததைத் தொடர்ந்து முன்னணி சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம், மாலத்தீவுக்கான பயணத் திட்டங்களை ரத்து செய்திருந்த நிலையில் சப்தமில்லாமல் மீண்டும் பயணத் திட்டங்களைக் கொண்டுவந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த ஜனவரி 8ஆம் தேதி மாலத்தீவுக்கான விமானம் உள்ளிட்ட பயண ஏற்பாடு திட்டங்களை காலவரையறை இன்றி நிறுத்துவதாக தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், விமானக் கட்டண விவரங்கள் உள்ளிட்டவை தற்போது பயணிகளுக்கு இணையதளத்தில் காட்டுவதால், பயணத் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

மாலத்தீவு
அருணாச்சல், சிக்கிம் பேரவைத் தேர்தல்: நாளை வாக்கு எண்ணிக்கை!

இந்தியாவிலிருந்து மாலத்தீவு செல்வோருக்கான விமான டிக்கெட் முன்பதிவு மற்றும் தங்கும் விடுதிகளுக்கான முன்பதிவுகளை அந்த நிறுவனம் சப்தம் இல்லாமல் தொடங்கியிருப்பதாகக் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இது தொடர்பான ஸ்க்ரீன் ஷாட்ஸ்களை, ஏராளமானோர், சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து தங்களது கருத்துகளையும் பதிவிட்டு வந்தனர்.

பலரும், நாடுதான் முக்கியம். பிறகுதான் எல்லாம் என்று கூறி, தனியார் சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனம், மாலத்தீவுக்கான பயணத் திட்டங்களை நிறுத்தியது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டதை சுட்டிக்காட்டி, உங்கள் விளம்பர உக்தி நிறைவு பெற்றுவிட்டது, ஆனால், எப்போது பயணத் திட்டங்களை தொடங்கினீர்கள், அதுபற்றி அறிவிப்புகளை பார்க்கவில்லையே? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஆனால், மாலத்தீவுக்கான சுற்றுலா பயணத் திட்டத்தை நாங்கள் தொடங்கவில்லை என்றும், தொடங்கினால் நிச்சயம் அதுபற்றிய அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அந்நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளார்.

மேற்கண்ட ஸ்கிரீன் ஷாட்ஸ்கள் வெறும் விமானக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டண விவரங்கள் அறியும் பக்கம்தான் என்றும், இன்னமும் பயணத் திட்டம் தொடங்கப்படவில்லை என்றும் அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com