
ஹைதராபாத்: தெலங்கானா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் ஹைதராபாத்தில் நடைபெற்ற 10வது மாநில அமைப்பு தின விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
டேங்க் காட்டில் உள்ள பாபாசாகேப் அம்பேத்கரின் சிலைக்கு மரியாதை செலுத்திய ரேவந்த் ரெட்டி, பிறகு ஆளுநரை வரவேற்றார். தொடர்ந்து மகளிர் சுய உதவிக்குழு அமைத்துள்ள ஸ்டால்களை முதல்வரும், கவர்னரும் பார்வையிட்டனர்.
இதனையடுத்து பாரம்பரிய கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தேசிய கொடிகளை கையில் ஏந்திய பயிற்சி போலீஸாரின் 'கொடி அணிவகுப்பு', வண்ணமயமான வானவேடிக்கைகள் மற்றும் லேசர் ஷோ ஆகியவை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்த தெலுங்கானா கவிஞர் ஆண்டே ஸ்ரீ எழுதிய 'ஜெய ஜெய ஹே தெலுங்கானா' என்ற புதிய மாநில கீதம் இசைக்கப்பட்டது. முன்னதாக, இங்குள்ள அணிவகுப்பு மைதானத்தில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.