கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி அரசில் உத்தவ் தாக்கரே இணைவார்: ரவி ராணா

Published On :3 ஜூன் 2024, 1:37 pm IST

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான 15 நாட்களில் மோடி அரசில் உத்தவ் தாக்கரே இணைவார் என ரவி ராணா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமராவதி எம்எல்ஏ ரவி ராணா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மோடி மீண்டும் பிரதமரான 15 நாட்களுக்குப் பிறகு, மோடி அரசில் உத்தவ் தாக்கரேவை காணலாம். ஏனென்றால் வரவிருக்கும் காலம் மோடியுடையது. உத்தவ் தாக்கரே அதை அறிவார்.

அமராவதி மக்களவைத் தொகுதியில் தனது மனைவி நவ்நீத் ராணா இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

சமூகத்தின் அனைத்து தரப்பினரும் அவருக்கு அதிக அளவில் வாக்களித்ததால் நவ்நீத் மீண்டும் எம்.பி.யாக வருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். அமராவதியின் சிட்டிங் எம்.பி.யான ரவி ராணாவின் மனைவி நவ்நீத் ராணா, மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு எதிராக அமராவதியில் காங்கிரஸ் சார்பில் எம்எல்ஏ பல்வந்த் வான்கடே மற்றும் பிரஹர் ஜனசக்தி கட்சியின் தினேஷ் பப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதே அமராவதி தொகுதியில் இருந்து நவ்நீத் ராணா சுயேச்சையாக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.