
பெங்களூரு புறநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டுள்ள மதசார்பற்ற ஜனதா தளத்தின் வேட்பாளரும் முன்னாள் பிரதமர் தேவகெளடாவின் மருமகனுமான சி.என்.மஞ்சுநாத் முன்னிலையில் உள்ளார்.
இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமாரின் சகோதரர் டி.கே.சுரேஷ் போட்டியிட்டிருந்தார்.
பகல் 2.30 நிலவரப்படி, டி.கே.சுரேஷை விட 2.64 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று மஞ்சுநாத் முன்னிலை வகிக்கிறார்.
மஞ்சுநாத் - 10,53,723
சுரேஷ் - 7,89,268
இந்த தொகுதியின் மக்களவை உறுப்பினராக கடந்த 2013 முதல் பதவி வகித்து வந்த சுரேஷை, முதல்முறையாக போட்டியிடும் மஞ்சுநாத் வெல்லும் தருவாயில் உள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.