கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

கர்னால் இடைத்தேர்தல்: முன்னிலையில் நயாப் சைனி!

கர்னால் தொகுதியில் முன்னிலையில் நயாப் சைனி.

Published On :4 ஜூன் 2024, 11:58 am IST

ஹரியாணா மாநிலத்தின் கர்னால் தொகுதியில் அந்த மாநில முதல்வர் நயாப் சிங் சைனி முன்னிலையில் உள்ளார்.

முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

மனோகர் லால் கட்டாருக்கு பதிலாக குருக்ஷேத்ரா எம்பியான நயாப் சைனி கடந்த மார்ச் 12-ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.

கர்னால் சட்டமன்ற இடைத்தேர்தலுடன், மாநிலத்தில் உள்ள 10 மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 25-ம் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில், கர்னால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஹரியாணா முதல்வர் நயாப் சிங் சைனி 13,668 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் போட்டியாளரான தர்லோச்சன் சிங்கை விட முன்னியில் உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.