
மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலின் முடிவுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், முக்கியத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை தேர்தல் ஆணைய இணையதளம் அறிவித்து வருகின்றது.
இந்த நிலையில், செய்தியாளர்களை மம்தா சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றி இந்திய மக்களுக்கான வெற்றி, பிரதமர் மோடியால் இந்தியா கூட்டணியை உடைக்க முடியாது.
மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பிரதமர் மோடி உடனடியாக ராஜிநாமா செய்ய வேண்டும். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை, மோடிக்கு தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு கட்டாயம் தேவைப்படுகிறது.
இந்தியா வென்றது, மோடி தோற்றுவிட்டார் என மக்களவை தேர்தல் முடிவுகள் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.