நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

தேசிய ஜனதா கூட்டணியுடன் மட்டும் தான் கூட்டணி: சந்திரபாபு நாயுடு

சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுடன் பேட்டி

News image

கோப்புப் படம்

Updated On :5 ஜூன் 2024, 6:38 am

DIN

’தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் மட்டும் தான் கூட்டணி’ என்று செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு பேட்டியளித்துள்ளார்.

ஆந்திரப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 சட்டப்பேரவைத் தொகுதிகளில், தெலுங்கு தேசம் கட்சி 135 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் தனிப்பெரும்பான்மை அக்கட்சிக்கு கிடைத்துள்ளது. தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு, தில்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, ”நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தான் இருக்கிறோம். இப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்திற்கு தான் செல்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சியானது மோசமானதாக இருந்தது; அந்த வெறுப்பில் தான் மக்கள் தெலுங்கு தேசத்தினை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்” எனப் பேட்டியளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.