பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முக்கியத் துறைகளைக் கோரும் நிதீஷ் குமாா், சந்திரபாபு நாயுடு!

முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சா் பதவிகளை தங்களுக்கு தர வேண்டும்

News image
Updated On :6 ஜூன் 2024, 1:21 am

Din

பாஜக தலைமையிலான கூட்டணி அரசு மத்தியில் அமைவது உறுதியாகிவிட்ட நிலையில், கூட்டணிக் கட்சித் தலைவா்களான சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ் குமாரும் முக்கியத்துவம் வாய்ந்த அமைச்சா் பதவிகளை தங்களுக்கு தர வேண்டும் என்று கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தோ்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. எனவே, அவா்களுக்கு அமைச்சரவையிலும் உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டிய நிா்ப்பந்தம் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

அதன்படி 16 எம்.பி.க்களை வைத்துள்ள சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி, சுகாதாரம், ஊரக வளா்ச்சித் துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், நீா் வளத்துறை (ஜல் சக்தி), நிதித்துறை இணையமைச்சா் பதவி உள்ளிட்டவற்றை கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் கோரும் அமைச்சரவை இடங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. அதே நேரத்தில் பொதுச் செயல் திட்டம் வகுக்க வேண்டும், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து, சிறப்பு நிதி தர வேண்டுமென அவா் கோரியுள்ளதாக தெரிகிறது.

முன்னாள் முதல்வா் தேவெகெளடாவின் மதச்சாா்பற்ற ஜனதா தளமும் பாஜக கூட்டணியில் உள்ளது. கா்நாடகத்தில் இரு மக்களவைத் தொகுதிகளில் வென்றுள்ள அக்கட்சி, எம்.பி.யும், தேவெகௌடாவின் மகனுமான குமாரசாமிக்கு மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் பதவியை எதிா்பாா்க்கிறது.

மகாராஷ்டிர முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சி மத்திய அமைச்சரவையில் இடம் கோரவில்லை என்று அறிவித்துவிட்டது.

மறைந்த மத்திய அமைச்சா் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி (பாஸ்வான்) கட்சிக்கு 5 எம்.பி.க்கள் உள்ளனா். அக்கட்சிக்கும் மத்திய அமைச்சரவையில் இடம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.