
குஜராத் மாநிலம் பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகக் களம் இறங்கி, பாஜக வேட்பாளர் டாக்டர் ரேகாபென் சௌதரியை வீழ்த்தி, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக் கணக்கைத் தொடங்கியிருக்கிறார் ஜெனிபென் தாகூர்.
மேற்கிந்திய மாநிலமான குஜராத்தில் காங்கிரஸ் இந்த ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில், குஜராத் மாநிலத்தில் ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் வென்றதில்லை. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், மூன்றாவது முறையாக க்ளீஸ் ஸ்வீப் என்ற வாக்கியத்தை சொல்ல முடியாமல் ஆக்கியிருக்கிறார் ஜெனிபென் தாகூர்.
பனஸ்கந்தா தொகுதியில் காங்கிரஸ் கால் வைத்திருப்பதன் மூலம், பாஜகவின் கனவு தகர்ந்துள்ளது. பாஜக வேட்பாளரை விட 30 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.
குஜராத்தில் உள்ள 26 தொகுதிகளும் பாஜகவின் இரும்புக்கோட்டையாக இருந்தவை. கடந்த 2019ஆம் ஆண்டு இந்த தொகுதியில் பாஜக வேட்பாளர் 3.68 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால், அந்த வரலாறுகளை எல்லாம் மாற்றி எழுதிவிட்டார் இரண்டு முறை எம்எல்ஏவாக இருந்த ஜெனிபென். இவர் குஜராத் பேரவைத் தேர்தலிலேயே, பாஜக அவைத் தலைவரை வீழ்த்தி மிகப்பெரிய போராளி என பெயர் எடுத்தவர்தான்.
தனது வெற்றி, ஒட்டுமொத்த தொகுதிக்கான வெற்றி என்று கூறியிருக்கும் ஜெனிபென்னுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை வாரிக் குவித்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.