
ஜூன் 7ஆம் தேதி மீண்டும் தில்லி வருவேன் என தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு பிறகு பேசிய அவர் இதனைத் தெரிவித்தார்.
தில்லியில் நரேந்திர மோடி இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் உள்பட தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதீஷ் குமார் பங்கேற்றனர்.
பாஜக தனித்துப் பெரும்பான்மை பெறாததால் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவிப்பதை எழுத்துப்பூர்வமாக அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் கூட்டத்தை முடித்துக்கொண்டு மோடி இல்லத்திலிருந்து சந்திரபாபு நாயுடுவும், நிதீஷ்குமாரும் புறப்பட்டனர்.
அப்போது, பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, ஜூ 7ஆம் தேதி மீண்டும் இங்கு (தில்லி) வருவேன் என பதிலளித்துச் சென்றார்.
ஜூன் 7ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளனர். அதில் சந்திரபாபு நாயுடுவும் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் ஆதரவு கடிதத்தையும் உறுப்பினர்கள் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.