
காங்கிரஸ் கட்சி நேரடியாக ’கை’ சின்னத்தில் போட்டியிட்ட ஆந்திரம் (23), அருணாச்சலப் பிரதேசம் (2), ஹிமாச்சலப் பிரதேசம் (4), மத்தியப் பிரதேசம் (29), உத்தரகண்ட் (5) , திரிபுரா (2), சிக்கிம் (1), மிஸோரம் (1) ஆகிய 8 மாநிலங்களில் உள்ள 67 மக்களவைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில்கூட வெற்றியை பதிவுசெய்யவில்லை.
ஆந்திரத்தில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 16-ல் தெலுங்கு தேசமும், பாஜக 4-லிலும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றிபெற்றது.
அருணாச்சலப் பிரதேசத்தில் இரண்டு தொகுதிகளிலும், உத்தரகண்ட்டில் 5 தொகுதிகளிலும், மத்தியப் பிரதேசத்திலுள்ள 29 தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலுள்ள 4 தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பதிவு செய்தது.
திரிபுராவில் உள்ள இரண்டு தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திரிபுரா கிழக்கு தொகுதியில் போட்டியிட்ட மகாராணி கிருதி சிங் டெபர்மா வெற்றி பெற்றார். திரிபுரா மேற்கு தொகுதியில் பிப்லப் குமார் தேப் வெற்றி பெற்றார்.
மிஸோரமில் உள்ள ஒரே தொகுதியில் ஜோரம் மக்கள் இயக்கத்தின் ரிச்சர்ட் வன்லால்மங்காஹியா 68,288 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
சிக்கிமில் உள்ள ஒரே தொகுதியில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சாவின் இந்திரா ஹாங் சுப்பா வெற்றிபெற்றார்.
மொத்தமுள்ள 534 தொகுதிகளில் இந்திய தேசிய காங்கிரஸ் 99 இடங்களில் வெற்றிபெற்று 2 ஆவது இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.