தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ராஜஸ்தான் எதிர்க்கட்சித் தலைவர் கார் விபத்தில் காயம்!

தில்லி - மும்பை அதிவிரைவுச் சாலையில் நேற்றிரவு விபத்து.

News image
Updated On :6 ஜூன் 2024, 3:57 am

DIN

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான டிகா ராம் சென்ற கார் விபத்தில் சிக்கியதில், புதன்கிழமை இரவு அவர் காயமடைந்தார்.

ஆழ்வாரில் இருந்து ஜெய்ப்பூருக்கு டிகா காரில் சென்று கொண்டிருந்த போது, தில்லி - மும்பை அதிவிரைவுச் சாலையில் பண்டரேஜ் அருகே விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த டிகா ராம், தௌசா மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும், டிகா விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.