காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கேரளத்தில் 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

பத்தனம்திட்டா உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

News image
Updated On :8 ஜூன் 2024, 10:18 am

DIN

கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு மாவட்டமான பத்தனம்திட்டா மற்றும் வடக்கு மாவட்டங்களான கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும்,

திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

கனமழையால் ஆபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, திருவனந்தபுரம் அருவிக்கரா அணையில் சனிக்கிழமை காலை 25 செ. மீட்டர் உயர்ந்துள்ளது. மேலும் உயர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதால் அப்பகுதியில் உள்ள மக்கள் எச்சரிக்கையா இருக்க வேண்டும் என்றும் மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.