19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

நீட் தேர்வில் குளறுபடி? மாணவர்கள் தொடர் போராட்டம்!

நீட் தேர்வு மதிப்பெண் முறையில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றச்சாட்டு!

உத்தர பிரதேசத்தின் பிரக்யராஜில் மாணவர்கள் போராட்டம் - படம் | ஏஎன்ஐ

Updated On :

நீட் தேர்வு மதிப்பெண் முறையில் குளறுபடிகள் இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் கடந்த 4ம் தேதி வெளியாகி உள்ள நிலையில், நீட் தேர்விற்கான மதிப்பெண் வழங்கும் முறையில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. தோ்வு தொடங்குவதற்கு முன்பாக இத் தோ்வு மீது பல்வேறு புகாா்கள் எழுந்தன. நீட் வினா தாளை சில மாணவா்கள் சமூக ஊடகத்தில் பதிவிட்டதாக சா்ச்சை எழுந்தது.

வாராணசியில் ஹிந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

வாராணசியில் ஹிந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - படம் | பிடிஐ

இந்த நிலையில், ஜூன் 14ம் தேதி வருவதாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு முடிவுகள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று வெளியானதில் கூட மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் 67 மாணவா்கள் முதலிடம் பெற்றதோடு, ஹரியாணாவில் ஒரே தோ்வு மையத்தில் தோ்வெழுதிய 6 போ் முதலிடம் பெற்றது பெரும் சா்ச்சையானது.

‘நீட் தோ்வில் குறிப்பிட்ட சில மாணவா்களுக்கு மட்டும் கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது’ என்று சில மாணவா்கள் புகாா் தெரிவித்தனா்.

வாராணசியில் ஹிந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

வாராணசியில் ஹிந்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் - படம் | பிடிஐ

தேர்வு மையங்களில் ஏற்பட்ட காலதாமத்திற்கு ஏற்ப கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக இதுகுறித்து நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமை விளக்கமளித்துள்ளது.

நீட் தோ்வு குளறுபடிகளைக் கண்டித்தும், மறு தேர்வு நடத்தக்கோரியும் தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலும் மாணவர்கள் ஆர்ப்பட்டம் நடத்தியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவ அணியான ‘இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு(எஸ் எஃப் ஐ)’ நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், முறைகேடுகள் தொடர்பான உரிய விசாரணை நடத்தவும் வலியுறுத்தி சனிக்கிழமை (ஜூன் 8) சென்னையில் போராட்டம் நடத்தியுள்ளது.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மாணவர்கள் போராட்டம்

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் மாணவர்கள் போராட்டம் - படம் | பிடிஐ

இந்திய மருத்துவர்கள் சங்கத்தின்(ஐ எம் ஏ) இளநிலை மருத்துவர்கள் அமைப்பினர், இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி வலியுறுத்தியுள்ளனர். மேலும், ’கருணை அடிப்படையிலான மதிப்பெண்கள்’ என்ற புது விதிமுறையை தேசிய தேர்வு முகமை இந்த முறை நீட் தேர்வில் கையாண்டிருப்பது ஏன்? என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.

இந்த சா்ச்சைகளைத் தொடா்ந்து, நிகழாண்டு நீட் தோ்வை ரத்து செய்யவேண்டும் என பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்கள் வலியுறுத்தியுள்ளனா். நீட் தோ்வு குளறுபடிகள் தொடா்பாக உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் உயா்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

Story image

படம் | ஏஎன்ஐ

சனிக்கிழமை (ஜூன் 8) செய்தியாளர்களுடன் பேசிய மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் சஞ்சய் மூர்த்தி, நீட் தேர்வுக்கு முன்பாக வினாத்தாள் கசிந்ததாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்துள்ள உயர்கல்வித் துறை செயலாளர், முறைகேடு புகார்கள் குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் நீட் தேர்வில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. அந்த குழு ஒரு வாரத்தில் விசாரித்து அறிக்கை அளிக்கும். அதன் அடிப்படையில் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சஞ்சய் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.