19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கோப்பை வெற்றி: இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல காரணமாக அமைந்த ஆட்ட நாயகன் மோஹித் உல்வா! ஆசிய கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா! உ.பி. மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்த ஹர்தீப் சிங் புரி! மேக்கேதாட்டு அணை கர்நாடகத்தின் உரிமை; யார் எதிர்த்தாலும் கவலை இல்லை! டி.கே. சிவகுமார்காசோலை மோசடி வழக்கு: நடிகா் விமலின் மனு தள்ளுபடி போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை! ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள் பதிவு!

சுரேஷ் கோபிக்கு மத்திய அமைச்சர் பதவி..?

கேரளத்தை சேர்ந்த பாஜக எம்.பி. ஒருவர் முதன்முதலாக மத்திய அமைச்சராகிறார்.

படம் | ஏஎன்ஐ

Updated On :

மத்தியில் அமையவுள்ள புதிய அமைச்சரவையில் யார், யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், கேரளத்தின் திருச்சூர் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற மலையாள நடிகர் சுரேஹ் கோபிக்கு மத்திய அமைச்சரவையில் பதவி வழங்கப்பட உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story image

படம் | ஏஎன்ஐ

மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 9) மாலை 7 மணியளவில் பதவி ஏற்கவுள்ளது. பாஜக கூட்டணியில் யார், யாருக்கு அமைச்சர் பதவி, என்னென்ன இலாகா என்பது தொடர்பாக முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் தில்லியில் உள்ள ஜெ.பி.நட்டாவின் இல்லத்தில் சனிக்கிழமை காலை நடைபெற்றது.

முன்னதாக, தனது தேர்தல் பிரசாரங்களில் ‘’திருச்சூருக்கான ஒரு மத்திய அமைச்சர், இது மோடியின் உத்தரவாதம்” என்ற முழக்கத்தின் மூலம், தன்னை வெற்றி பெறச் செய்தால் திருச்சூர் தொகுதியிலிருந்து ஒரு மத்திய அமைச்சராக தான் பதவியேற்பேன் என்று குறிப்பிட்டிருந்தார் சுரேஷ் கோபி.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய 3 மாநிலங்களையும் சேர்த்து மொத்தமுள்ள 60 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒரேயொரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து மத்திய அமைச்சரவையில் தென் இந்தியாவின் பாஜக பிரதிநிதியாக சுரேஷ் கோபி இடம்பெற அதிக வாய்ப்பிருப்பதாகவே பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Story image

படம் | சுரேஷ் கோபி எக்ஸ் தளப் பதிவு

இந்த நிலையில், புதுதில்லியில் இன்று(ஜூன் 9) பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டுச் சென்ற சுரேஷ் கோபி, திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் பேசியதாவது, ”அமைச்சர் பதவியைப் பொருத்தவரை, மோடியே முடிவை எடுப்பார். இதைப் பற்றி வேறு எதுவும் எனக்கு தெரியாது. பிரசாரத்தின் போது, திருச்சூர் மக்களிடம் ஏற்கெனவே சொல்லிவிட்டேன். கேரளத்துக்கும் தமிழகத்துக்கும் சேர்த்து பணியாற்றும் ஒரு எம்.பி.யாக நான் இருப்பேன்” என்று கூறிச் சென்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.