அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் தீர்மானம் முறியடிப்பு: டிரம்ப் வரவேற்பு
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளதற்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளது குறித்து...

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் தீர்மானம் முறியடிப்பை வரவேற்றுள்ள டிரம்ப். - AP
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளதை அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை, பாதுகாப்புத்துறை அமைச்சர் பீட் ஹெக்செத்தின் பதவிக்கால நடத்தை மற்றும் ஈரானில் நடந்து வரும் போரைக் கையாண்ட விதம் தொடர்பாக அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தை நிராகரித்துள்ளது.
அமெரிக்காவில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற இடைக்காலத் தோ்தலில் டிரம்ப்பின் ஆளும் குடியரசுக் கட்சி மிகப் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. எதிா்க்கட்சியான ஜனநாயக கட்சி அதிக இடங்களில் வெற்றிபெற்று, அமெரிக்க நாடாளுமன்ற இரு அவைகளிலும் பெரும்பான்மை பெற்றது. இதனால், விருப்பம்போல் மசோதாக்களை நிறைவேற்றுவதில் டிரம்ப் அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
இடைக்காலத் தோ்தல் தோல்விக்கு, ஈரான் மீதான போா், அதனால் ஏற்பட்ட எரிவாயு விலை உயா்வு, இஸ்ரேல் மீது அமெரிக்க மக்களுக்கு எழுந்துள்ள விரோதப் போக்கும் போன்றவை காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.
இந்த நிலையில், அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத்தை பதவி நீக்கம் செய்யக் கோரும் தீர்மானம் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம் 211-204 என்ற வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
டிரம்ப் வரவேற்பு
இந்த வாக்கெடுப்பு வெற்றி குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில், இந்த தீர்மானத்தின் தோல்வியை வரவேற்பதாக டிரம்ப் கூறியுள்ளார்.
பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்செத் மீது ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த பதவி நீக்க தீர்மானம் "மிகவும் பரிதாபமாகத் தோல்விடைந்துள்ளது" !
குடியரசுத் கட்சியை சேர்ந்த தாமஸ் மாசியைத் தவிர, மற்ற அனைத்துக் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் பீட் ஹெக்செத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம் பீட் ஹெக்செத் குற்றமற்ற 'சிறந்த அமெரிக்க தேசபக்தர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது' என்று கூறியுள்ளார்.
பீட் ஹெக்செத் ஒரு சிறந்த அமெரிக்க தேசபக்தர். வெனிசுலா மற்றும் ஈரானில் அவரது தலைமையிலான ராணுவ நடவடிக்கைகள் மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளன. இந்த வெற்றிகள் அமெரிக்க ராணுவ வரலாற்றிலேயே இல்லாதது என பதிவிட்டுள்ளார்.
ஜனநாயகக் கட்சியினர், அமெரிக்காவை துஷ்பிரயோகம் செய்து, அதிகாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகின்றனர் அவர்களை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என டிரம்ப் கூறியுள்ளார்.
மேலும், வாஷிங்டனில் இல்லாத 11 ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் வருகையின்மையும் இந்த தீர்மானத்தை அவையின் முழுமையான வாக்கெடுப்பிற்கு விடாமல் முடக்குவதற்குக் குடியரசு கட்சிக்கு சாதகமாகவே அமைந்துள்ளது.
இந்த தீர்மானம் வெற்றி பெற்றிருந்தால், அமெரிக்க வரலாற்றிலேயே பதவி நீக்கம் செய்யப்பட்ட முதல் பாதுகாப்பு அமைச்சர் என்ற பெயரை ஹெக்செத் பெற்றிருப்பார்.
இதற்கு முன்னர் 1876-ஆம் ஆண்டு வில்லியம் பெல்க்னாப் என்ற போர்ச் செயலர் இதுபோன்ற நடவடிக்கையை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.
President Trump celebrated the vote in a post on Truth Social, saying the effort "has miserably FAILED".
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


