மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி (கோப்புப்படம்)

விளக்குகளை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்த மம்தா!

பிரதமர் பதவியேற்பின்போது விளக்குகளை அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்த மம்தா!
Published on

புது தில்லி: திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, ஞாயிற்றுக்கிழமை இரவு அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாக அக்கட்சி எம்.பி. தெரிவித்துள்ளார்.

திரிணமூல் எம்.பி. சகரிக கோஸ் இதுபற்றி கூறுகையில், ஞாயிற்றுக்கிழமை புது தில்லியில் பிரதமராக மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியின்போது, மம்தா பானர்ஜி அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு இருளில் அமர்ந்திருந்ததாகத் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி பெரும்பான்மை தொகுதிகளைப் பெறவில்லை. எனவே, அவரை பிரதமர் பதவியிலிருந்து மாற்றுவிட்டு வேறு யாரையேனும் நியமிக்க வேண்டும் என்றும் சகரிக வலியுறுத்தியிருக்கிறார்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவர் பிரதமர் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார் என்று மம்தா பானர்ஜி அதிருப்தியில் இருந்ததாகவும், பிரதமர் மோடி பதவியேற்றபோது, நாட்டின் ஒரே ஒரு பெண் முதல்வர் மம்தா தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிட்டத்தட்ட வாரணாசியை இழந்துவிட்டார்கள், அயோத்தியாவில் தோற்றுவிட்டார்கள், ஒட்டுமொத்தமாக பிரசாரம் செய்தும் பெரும்பான்மையை பெறமுடியவில்லை. முடியை மாற்ற வேண்டும், புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்றும் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com