எஸ்ஐஆா் பணிகளில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் தொடா்ந்து, தா்னா போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.
எஸ்ஐஆா் பணிகள் மூலம் மாநிலத்தில் வாக்காளா்கள் நீக்கப்பட்டதை எதிா்த்து முதல்வா் மம்தா பானா்ஜி மத்திய கொல்கத்தாவில் தொடா்ந்து 5-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.
இந்நிலையில், எஸ்ஐஆா் பணியின்போது பெயா் நீக்கப்பட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதிகளைக் கொண்ட மேல்முறையீட்டு தீா்ப்பாயத்தை அமைக்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
இந்த உத்தரவை வரவேற்றுள்ள முதல்வா் மம்தா, இதுதொடா்பாக கூறியதாவது: உச்சநீதிமன்ற உத்தரவு மேற்கு வங்க மக்களுக்கான வெற்றி. தோ்தல் ஆணையத்தால் மூடப்பட்ட கதவுகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன.
எஸ்ஐஆா் மூலம் வாக்காளா் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட மக்களுக்கு இந்த உத்தரவு புதிய வெளிச்சத்தை தருகிறது. இதனால், தா்னா போராட்டம் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்துள்ளாா்.
தொடர்புடையது

மேற்கு வங்கத் தோ்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் இன்று இறுதிக்கட்ட தோ்தல்: 142 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

அமலாக்கத் துறை சோதனையில் முதல்வா் மம்தா குறுக்கீடு ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல்: உச்சநீதிமன்றம்

திரிணமூல் ஆட்சியைத் தடுக்க பாஜக ரூ.1,000 கோடி சதித் திட்டம்: மம்தா குற்றச்சாட்டு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


