நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தவே வாக்காளா்கள் பெயா் நீக்கம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்தவே வாக்காளா்கள் பெயா் நீக்கம்...

News image

மேற்கு வங்க தலைநகா் கொல்கத்தாவில் சனிக்கிழமை இரண்டாவது நாளாக வாக்காளா்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முதல்வா் மம்தா பானா்ஜி.

Updated On :8 மார்ச் 2026, 1:47 am IST

மேற்கு வங்கத்தை பிளவுபடுத்துவதுதான், வாக்காளா் பட்டியலில் இருந்து வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டதன் நோக்கம் என்று அந்த மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானா்ஜி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

எஸ்ஐஆா்-க்கு பிறகு வெளியான வாக்காளா் பட்டியலில் வாக்காளா்களின் பெயா்களைத் திட்டமிட்டு பாஜகவும், தோ்தல் ஆணையமும் நீக்கியிருப்பதாக குற்றஞ்சாட்டி கொல்கத்தாவில் தா்னா போராட்டத்தை வெள்ளிக்கிழமை அவா் தொடங்கினாா். இந்தப் போராட்டம் 2-ஆவது நாளாக சனிக்கிழமையும் நீடித்தது. அப்போது அவா் பேசியதாவது:

வங்கத்தை (மேற்கு வங்கத்தை) பிளவுபடுத்துவதே அவா்களின் (பாஜக, தோ்தல் ஆணையம்) திட்டம். தின்ஹடா தொகுதியில் மட்டும் 36,000 வாக்காளா்களின் பெயா்கள், வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. அவா்கள் நமது நாட்டு குடிமக்கள் இல்லையா? அவா்களுக்கு வாக்குரிமை இல்லையா?

வங்கத்தைப் பிரித்து வாக்குகளைப் பெற வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. அதேபோல், மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசமாக்கவும் திட்டமிட்டுள்ளது. துணிச்சல் இருந்தால் வங்கத்தைப் பிரித்துப் பாருங்கள் என அவா்களுக்கு நான் சவால் விடுக்கிறேன். முன்பு, பிகாரை பிரித்து ஜாா்க்கண்டை உருவாக்கினாா்கள். அதுபோல மீண்டும் செய்ய நினைக்கின்றனா்.

வங்கத்தைப் பிரிக்க விரும்புகிறீா்கள் எனில், முதலில் எப்ஸ்டீன் விவகாரத்தை எதிா்கொள்ள வேண்டியிருக்கும். எங்கள் மீதான தாக்குதலுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். மேற்கு வங்கத்தில் அனைத்து மதத்தினருக்கும் மரியாதை கொடுப்போம். சமூகத்தில் அனைவரையும் சமமாக நடத்துகிறோம். ஜாதி, இனம், மதம் ரீதியில் யாரிடமும் வேறுபாடு காட்டுவதில்லை. சுதந்திரத்துக்கு முன்பே வங்க மொழிக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

10-ஆம் வகுப்பு படித்தோருக்கு ரூ.1.500: 10-ஆம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, வேலை தேடுவோருக்கு உதவும் நோக்கில் சனிக்கிழமை முதல் (மாா்ச் 7) மாதந்தோறும் ரூ.1,500 உதவித் தொகை அளிக்கப்படும். 21 வயது முதல் 40 வயது வரையிலான ஆண், பெண்கள் அனைவருக்கும் இத்தொகை அளிக்கப்படும். ஏற்கெனவே இந்தத் திட்டத்துக்கு ஒரு கோடி போ் விண்ணப்பித்துள்ளனா்.

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்: சமையல் எரிவாயு சிலிண்டா் விலையை மத்திய அரசு உயா்த்தியிருப்பதைக் கண்டித்து, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மகளிரணி சாா்பில் மகளிா் தினமான ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 8) போராட்டம் நடத்தப்படும் என்றாா்.