தேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

தெலுங்கு தேசத்தில் ஒரு அமைச்சரும், ஒரு இணையமைச்சரும்

தெலுங்கு தேசத்திற்கு ஒரு அமைச்சரும், ஒரு இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது

News image

கோப்புப் படம்

Updated On :10 ஜூன் 2024, 3:08 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பதவியேற்ற அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடுக்கு விமானப் போக்குவரத்துத் துறையும் மற்றும் சந்திரசேகர் பெம்மாசானிக்கு தகவல் தொடர்பு மற்றும் ஊரகவளர்ச்சித் துறையின் இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசத்தில் தெலுங்கு தேசத்தின் ராம் மோகன் நாயுடு ஸ்ரீகாகுளம் தொகுதியிலும், சந்திரசேகர் பெம்மாசானி குண்டூர் தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்தனர்.

ஆந்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 135 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது. கூட்டணிக் கட்சிகளான ஜனசேனை 21, பாஜக 11 தொகுதிகளில் வென்றுள்ளது. ஆந்திரத்தை ஆட்சி செய்து வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 11 இடங்களில் மட்டுமே வென்று படுதோல்வியை சந்தித்தது.

மேலும், மக்களவைத் தொகுதிகளிலும் 16 இடங்களை கைப்பற்றியுள்ள சந்திரபாபு நாயுடு, தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைய முக்கிய கூட்டணிக் கட்சியாக உருவெடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.