

லடாக் மக்களவைத் தொகுதி உறுப்பினர் முகமது ஹனிஃபா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் காங்கிரஸின் ஆதரவு எம்.பி.க்களின் எண்ணிக்கை மக்களவையில் 102-ஆக அதிகரித்துள்ளது. ’இந்தியா’ கூட்டணிக்கான ஆதரவு 237-ஆக அதிகரித்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் 99 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், ஏற்கெனவே 2 சுயேச்சைகள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் வெற்றி பெற்ற மகாராஷ்டிரத்தை சேர்ந்த விஷால் படேலும், பிகாரை சேர்ந்த பப்பு யாதவும் காங்கிரஸ் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தற்போது லடாக் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டு 27862 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஷனிஃபா ஆதரவு தெரிவித்துள்ளார்.
லடாக் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டிசெரிங் நம்க்யால் 37,397 வாக்குகளும் பாஜக வேட்பாளர் தாஷி கியால்சன் 31,956 வாக்குகளும் பெற்று தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட ஹனிஃபா, ஏற்கெனவே லடாக் தன்னாட்சி மலை மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் போட்டியிட்டு வெறும் 66 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளார்.
லடாக்குக்கு மாநில அந்தஸ்து, ஆறாவது அட்டவணையில் சேர்ப்பது, லே மற்றும் கார்கிலுக்கு தனி மக்களவைத் தொகுதி, உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளிட்ட வாக்குறுதிகள் ஹனிஃபா வெற்றி பெற முக்கிய காரணங்களாக அமைந்தது.
கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் லடாக் தொகுதியில் பாஜக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தேர்தல் 1957: சட்டப்பேரவைக்குள் முதன்முதலாக நுழைந்த திமுக!

சொல்லப் போனால்... காங்கிரஸ் கட்டெறும்பாவது ஏன்?

மாநிலங்களவைத் தேர்தலில் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவு!

திமுக கூட்டணி! கை கொடுக்குமா, காலை வாருமா காங்கிரஸ்?
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

