டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பேருந்து மட்டும் பள்ளத்தில் விழுந்திருக்காவிட்டால்.. ரீசி பக்தரின் நெஞ்சை உருக்கும் தகவல்

பேருந்து மட்டும் பள்ளத்தில் விழுந்திருக்காவிட்டால் அனைவரும் பலியாகியிருப்போம் என்கிறார் பக்தர்.

News image
Updated On :11 ஜூன் 2024, 7:44 am

DIN

ஜம்மு-காஷ்மீா் பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 9 பேர் பலியான சம்பவத்தில் பேருந்து மட்டும் பள்ளத்தில் விழுந்திருக்காவிட்டால், அனைவரையும் பயங்கரவாதிகள் கொன்றுகுவித்திருப்பார்கள் என்று கூறியிருக்கிறார் அந்த பேருந்தில் இருந்த பக்தர் ஒருவர்.

ரீசி சம்பவத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பக்தர் ஒருவர் தங்களுக்கு நடந்த அந்த கொடூர சம்பவத்தைப் பற்றி விவரித்துள்ளார்.

எங்கள் பேருந்து மீது சுமார் 15 நிமிடங்கள் பயங்கரவாதிகள் சுற்றிவளைத்து துப்பாக்கியால் சுட்டனர். ஆனால், எதிர்பாராதவிதமாக பேருந்து பள்ளத்தில் விழுந்தது. இதனால்தான் அந்த பேருந்தில் இருந்த மற்றவர்கள் உயிர்தப்பினர். ஒரு மரத்துக்கும் பாறைக்கும் நடுவில் பேருந்து சிக்கிக்கொண்டது. அதனால், மேற்கொண்டு பேருந்து உருண்டு விழாமல் போனதே உயிர்பலி அதிகம் ஏற்படாமல் தப்பித்திருக்கிறது.

பலரும் பேருந்து பள்ளத்தில் விழுந்தபோது அச்சமடைந்தோம். ஆனால், விழுந்த சிறிது தூரத்திலேயே பேருந்து பத்திரமாக பாறைக்கு இடையே சிக்கிக்கொண்டது. பேருந்து மட்டும் விழாமல் இருந்திருந்தால், அனைவரையும் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றிருப்பார்கள் என்கிறார் 18 வயது இளைஞர் ஒருவர். மேலும், பேருந்து பள்ளத்தில் விழுந்தபோதும் பயணிகள் கூச்சலிட்ட வரை பயங்கரவாதிகள் பேருந்து நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். அனைவரும் கூச்சலிடுவதை நிறுத்திய பிறகே நாங்கள் அனைவரும் செத்துவிட்டோம் என்று நினைத்து அவர்கள் சுடுவதை நிறுத்தினர். பேருந்தில் இருந்த 40 பக்தர்களும் வைஷ்ணோ தேவி கோயிலுக்கு மலையேறிச் சென்றதால் மிகக் களைப்பாக இருந்தோம். பலரும் தூங்கிக்கொண்டிருந்தனர். சிலருக்கு என்ன நடந்தது என்பதே தெரியாத நிலை இருந்தது என்கிறார்கள்.

எல்லோருமே தாங்கள் செத்துவிடுவோம் என்றுதான் நினைத்திருந்ததாகவும், பயங்கரவாதிகளை துப்பாக்கியுடன் பார்த்தபோது, அவரவர் வாழ்க்கைத் துணையும், பிள்ளைகளும் ஒரு நிமிடம் நினைவுக்கு வந்துபோனதாகவும் மீண்டும் அவர்களை பார்ப்போம் என்ற நம்பிக்கையெல்லாம் இல்லவே இல்லை என்றும் ஒருசேர கூறுகிறார்கள் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றபடி.

ஜம்மு-காஷ்மீரில் பக்தா்கள் பயணம் செய்த பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். அதில் பேருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து 9 போ் உயிரிழந்தனா்; 33 போ் பலத்த காயமடைந்தனா். கண் முன் தன்னை நோக்கி துப்பாக்கிகள் ஏந்திய பயங்கரவாதிகள், துப்பாக்கிகளிலிருந்து வேகமாக சீறிக்கொண்டு வரும் துப்பாக்கிகள் தன்னை துளைத்தெடுத்த போதும், பேருந்தை பள்ளத்துக்குள் கவிழாமல் கொண்டு செல்ல ஓட்டுநர் தீரத்துடன் போராடியபோதும், தொடர்ந்து வந்த குண்டுகளால் ஓட்டுநர் பலியான பிறகே, பேருந்து சாலையோரப் பள்ளத்தில் விழுந்ததாகவும் இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் தெரிவித்திருந்தனர்.

உத்தர பிரதேசத்தில் இருந்து ஆன்மிகப் பயணமாக பக்தா்கள் ஒரு பேருந்தில் ஜம்மு-காஷ்மீருக்கு சென்றனா். ஜம்மு-காஷ்மீரின் ரீசி மாவட்டத்தில் உள்ள சிவ கோத்ரி ஆலயத்தில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி ஆலயத்துக்குச் சென்று கொண்டிருந்தனா். தெரியாத் என்ற கிராமம் அருகே பேருந்து சென்றபோது, பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். இதில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. அதில் 9 போ் உயிரிழந்தனா். 33 போ் பலத்த காயமடைந்தனா்.

இதுகுறித்து ரீசி மாவட்ட மூத்த காவல் துறைக் கண்காணிப்பாளா் மோஹித் சா்மா கூறுகையில்,‘பலத்த காயமடைந்த 33 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். மீட்புப் பணிகள் முடிவடைந்துள்ளன. முதல்கட்ட விசாரணையில் பேருந்தில் வந்தவர்கள் அனைவரும் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவா்கள் எனத் தெரியவந்துள்ளது’ என்றாா்.

ரஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் இதற்கு முன்பு அவ்வப்போது பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில், இதுவரை அதிகப்படியான பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறாத ரீசி மாவட்டத்திலும் தற்போது தாக்குதல்கள் அதிகரித்து இருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தத் தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் ரீசி மற்றும் ரஜௌரி மாவட்டங்களைச் சோ்ந்த பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.