
பிகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் இன்று(ஜூன் 11) தனது 77வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாடு, காலத்தை வென்ற கொள்கைகளை அமல்படுத்துதல், மத நல்லிணக்கத்தை முன்னிறுத்துதல் ஆகியவற்றுக்கான உங்களுடைய முயற்சி அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய சமுதாயத்தை வடிவமைக்க முக்கிய பங்காற்றியுள்ளது.
உங்கள் வாழ்நாள் சேவை, எங்கள் அனைவருக்கும் தொடர்ந்து உத்வேகமளித்துக் கொண்டேயிருக்கும் எனப் பதிவிட்டு வாழ்த்தியுள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி லாலு பிரசாத் யாதவ் தனது இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். இந்த காணொலியை ராஷ்டிரிய ஜனதா தளம் சமூக வலைதளங்களில் பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.
ராஷ்டிரிய ஜனதா தள(ஆர்ஜேடி) கட்சியின் மூத்த தலைவரான லலு பிரசாத் யாதவ் மத்தியில் கடந்த 2004 - 2009 வரையிலான காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்காலத்தில் ரயில்வே துறை அமைச்சராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.