ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

கொல்கத்தா மதுபான விடுதியில் பயங்கர தீ விபத்து!

மத்திய கொல்கத்தா மதுபான விடுதியில் தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

News image
உணவு விடுதியில் ஏற்பட்ட தீயினால் உண்டாகும் புகை- பிடிஐ
Updated On :11 ஜூன் 2024, 9:22 am

DIN

மத்திய கொல்கத்தாவில் உள்ள பூங்கா வீதியில் பயங்கர தீ விபத்து செவ்வாய்க்கிழமை ஏற்பட்டுள்ளது.

யாரும் காயமுற்றதாக தகவல்கள் இதுவரை இல்லை. தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

பன்னடுக்கு கட்டடத்தில் செயல்பட்டு வரும் மதுபான கேளிக்கை மற்றும் உணவக விடுதியில் தீ பற்றியதை காலை 10.45 மணிக்கு கவனித்துள்ளனர்.

தகவல் கிடைத்ததும் விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தொடக்கத்தில் நான்கு என்றளவில் இருந்தன. பின்னர் 15-க்கும் அதிகமான வாகனங்கள் தீயணைப்பில் ஈடுபட்டு வருகிறளவுக்கு தீ பற்றியிருக்கிறது.

தீயணைப்பு பணியில் வீரர்கள்

தீயணைப்பு பணியில் வீரர்கள்

மாநில தீயணைப்பு துறை அமைச்சர் சுஜித் போஸ் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.

எதனால் தீப் பற்றியது என்பது குறித்த விவரங்கள் இல்லை. தீயணைக்கப்பட்டதும் தடவியல் நிபுணர்கள் ஆய்வு செய்வர் என அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

விடுதியில் சிலிண்டர்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

பரபரப்பான போக்குவரத்து உள்ள சாலை என்பதால் தற்போதைக்கு வாகனங்களுக்கான வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.