கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து!

கோவையில் உதிரிபாகக் கடையில் நடந்த பயங்கர தீ விபத்து தொடர்பாக...
கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து.
கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து.
Updated on
1 min read

கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு டயர்கள் உள்ளிட்ட பொருள்கள் வெடித்து, குடியிருப்புகளுக்கும் தீ பரவி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

கோவை மாவட்டம் காட்டூர் பகுதியில் உள்ள பட்டேல் ரோடு, பிள்ளையார் கோயில் தெருவில் அமைந்து உள்ள இயந்திர உதிரிபாகங்கள் விற்பனைக் கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், கடைக்குள் இருந்த ஆயில் மற்றும் பிளாஸ்டிக் உதிரிபாகங்கள் தீப்பிடித்ததால், சில நிமிடங்களிலேயே தீப்பற்றி எரிய தொடங்கியது.

உதிரிபாகக் கடைக்கு மிக அருகிலேயே நெருக்கமான குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், தீயானது அடுத்தடுத்த வீடுகளுக்கும் வேகமாகப் பரவத் தொடங்கியது.

​தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. இருப்பினும், குறுகலான வீதிகள் மற்றும் கொழுந்து விட்டு எரியும் தீயினால், தீயணைப்பு வீரர்கள் உள்ளே நுழைவதில் பெரும் சவால்கள் ஏற்பட்டன.

இந்நிலைமையில், தீ விபத்தை உணர்ந்த அப்பகுதி பொதுமக்களும் தீயணைப்புத் துறையுடன் கைக்கோர்த்து தண்ணீரை ஊற்றி தீயை அணைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

உதிரிபாகக் கடையில் ஏற்பட்ட இந்த விபத்துக்கு மின் கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் கவனக்குறைவா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வர கூடுதலாக மூன்று தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

Summary

A massive fire broke out at a spare parts shop in Coimbatore.

கோவையில் உதிரிபாகக் கடையில் பயங்கர தீ விபத்து.
கும்பகோணத்தில் 2,0000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு: ஸ்ரீதர் வேம்பு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com