ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை நீடிக்கும்!

வட இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2024, 3:06 pm

DIN

வட இந்தியாவில் அடுத்த சில நாள்களுக்கு வெப்ப அலை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மகாராஷ்டிரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது மெல்ல மத்திய மற்றும் வட இந்தியாவை நோக்கி நகரவுள்ளதாகவும், ஒடிஸா, மேற்கு வங்கத்தின் வடமேற்கு பகுதி வரை சென்று மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர், தில்லி, உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட் மற்றும் வடக்கு ராஜஸ்தானில் வெப்ப அலை நீடிக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக உத்தரகண்ட், ஹிமாசலப் பிரதேசம், பஞ்சாப், ஜார்க்கண்ட், மேற்குவங்கத்தில் வெப்ப அலை கூடுதலாக இருக்கக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட், தெற்கு உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சண்டீகர், தில்லி, பஞ்சாப், வடக்கு ராஜஸ்தானில் வெப்ப நிலை 45 - 47 டிகிரி செல்சியஸ் வரை இருந்ததாவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.