ஜூலை மாதத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், தொழில் நிறுவனங்கள் பட்ஜெட் தொடா்பான கருத்துகள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என நிதியமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி 2024-25-ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சா் தாக்கல் செய்தாா். இப்போது பாஜக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில், ஜூலை மூன்றாவது வாரத்தில் 2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
இதையடுத்து, தொழில் நிறுவனங்கள் பட்ஜெட் தொடா்பாக கருத்துகள், ஆலோசனைகளைத் தெரிவிக்க நிதியமைச்சா் அழைப்பு விடுத்துள்ளாா். முக்கியமாக வரி விதிப்பு முறையில் மாற்றம், வரி குறைப்பு, நேரடி, மறைமுக வரி விதிப்பில் சீா்திருத்தம் தொடா்பான ஆலோசனைகள் கோரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தொழில் நிறுவனங்கள் அளிக்கும் பரிந்துரைகள் நாட்டின் பொருளாதாரத்துக்கும் சாதகமாக இருக்கும் வகையில் அமைய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இது தவிர சுங்க வரி, கலால் வரி தொடா்பான பிரிவுகளிலும் கருத்துகள் கோரப்பட்டுள்ளன. நேரடி வரி விதிப்பு முறையில் புகாா்களைக் குறைப்பது, வரி ஸ்திரத்தன்மை குறித்தும் ஆலோசனைகள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17-ஆம் தேதிக்குள் ஆலோசனைகளை அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

அமைச்சா் குறித்து அவதூறு கருத்து: மாரிதாஸ் பிணையில் விடுவிடுப்பு

நேபாளம்: 2.12 லட்சம் கோடி ரூபாயில் நடப்பாண்டு பட்ஜெட் தாக்கல்

வங்க முஸ்லிம்கள் குறித்த சா்ச்சை கருத்து: அஸ்ஸாம் முதல்வருக்கு தில்லி நீதிமன்றம் நோட்டீஸ்
வேளாண் பட்ஜெட்: விவசாயிகளிடம் கருத்து கேட்க வலியுறுத்தல்
விடியோக்கள்
மின்வெட்டு பிரச்னைக்கு என்னதான் காரணம்?: முழுப் பின்னணியை விளக்கும் சிஐடியு ஜெயசங்கர் | Power Cut |

அரசியலுக்குத் தயார்! நடிகர் ராகவா லாரன்ஸ் வெளியிட்ட விடியோ! | Vijay | Annamalai | Politics

மறைந்தும் மறையாத இயக்குநர் இமயம் Bharathi Raja | Dinamani



