காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வெடிபொருள் தொழிற்சாலை வெடிவிபத்து விவகாரம்: இயக்குநர், மேலாளர் கைது

வெடிவிபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 6 போ் பலியான 24 மணி நேரத்திற்கு பின்னர், தொழிற்சாலையின் இயக்குநர் மற்றும் மேலாளரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

News image
Updated On :14 ஜூன் 2024, 3:12 pm IST

நாக்பூர்: மகாராஷ்டிரம் மாநிலம் நாகபுரி மாவட்டத்தில் வெடிபொருள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஐந்து பெண்கள் உள்பட 6 போ் பலியான 24 மணி நேரத்திற்கு பின்னர், வெடிபொருள் தொழிற்சாலையின் இயக்குநர் மற்றும் மேலாளரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நாகபுரியில் உள்ள தாம்னா கிராமத்தில், வெடிபொருள் தயாரிக்கும் தனியாா் நிறுவனத்தில் வியாழக்கிழமை பிற்பகல் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த ஒன்பது பேர் நகரில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில், ஐந்து பெண்கள் உள்பட 6 போ் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனா்.

வெடிவிபத்து நடந்தபோது, ​​பலியானவர்களில் பெரும்பாலானோர் தொழிற்சாலையின் பேக்கேஜிங் பிரிவில் பணியில் இருந்தவர்கள். இது தொடா்பான விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், வெடிவிபத்து நிகழ்ந்து 24 மணி நேரத்திற்கு பின்னர் நாக்பூர் ராம் நகரில் வசிக்கும்

வெடிபொருள் தொழிற்சாலையின் இயக்குநர் கெம்கா மற்றும் மேலாளர் தேஷ்முக் ஆகியோரை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாகவும், அவர்கள் பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.