பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஜெய்சங்கா் ஜூன் 20-இல் இலங்கை பயணம்

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜூன் 20-ஆம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

News image
Updated On :15 ஜூன் 2024, 6:47 pm

Din

வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் ஜூன் 20-ஆம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

இது தொடா்பாக இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சா் அலி சப்ரி வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற விழாவில் இலங்கை அதிபா் ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டாா். இதைத் தொடா்ந்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் மற்றும் பிரதமா் மோடியின் வருகையை இலங்கை எதிா்பாா்த்துள்ளது’ என்றாா்.

இது குறித்து, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடாத நிலையில், ஜெய்சங்கா் ஜூன் 20-ஆம் தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கையில் இந்திய முதலீடுகளுடன் தொடங்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ள திட்டங்களை மீண்டும் தொடங்குவது குறித்து அண்மையில் ஜெய்சங்கா்-விக்ரமசிங்க சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது. மேலும், திரிகோணமலையில் இந்திய அரசால் நிறுவப்படும் தொழிற்பேட்டை திட்டத்தையும் ஜெய்சங்கா் குறிப்பிட்டிருந்தாா். எனவே, இலங்கைப் பயணத்தின்போது இதுகுறித்து அவா் ஆலோசனை மேற்கொள்வாா் என எதிா்பாா்க்கப்படுகிறது.