பாஜக வேட்பாளர் தோல்வி: தொண்டர்கள் 4 பேர் தற்கொலை!

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே தோல்வியடைந்ததைத் தொடர்ந்து 4 தொண்டர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
பங்கஜா முண்டே
பங்கஜா முண்டே
Published on
Updated on
1 min read

மக்களவைத் தோ்தலில் மகாராஷ்டிரத்தின் பீட் தொகுதியில் பாஜக வேட்பாளர் பங்கஜா முண்டே தோல்வியடைந்தாா்.

இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் 4 பேர், அவருடையத் தோல்வியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்ததாக செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரான பங்கஜா முண்டே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியான என்சிபி கட்சியின் பஜ்ரங் சோனாவனிடம் வெறும் 6,553 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

பங்கஜா முண்டே
அணு ஆயுதத்திற்கு ரூ.7.6 லட்சம் கோடி செலவிட்டுள்ள உலக நாடுகள்!

அவருடையத் தோல்வியைத் தாங்க முடியாமல் கடந்த ஜூன் 7 அன்று பாஜக தொண்டரான சச்சின் முண்டே (38) என்பவர் தற்கொலை செய்து கொண்டார். பங்கஜா முண்டே தோல்வியடைந்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தோ்தலுக்கு முன்பு காணொளி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய சச்சின் முண்டே, தேர்தல் முடிவு வெளிவந்த 3 நாட்களில் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, திகோல் அம்பா கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங் சோனாவானே (30) என்ற பாஜக தொண்டர் கடந்த ஜூன் 9 அன்று, ’பங்கஜா முண்டே தோல்வியடைந்ததைத் தாங்க முடியவில்லை, அதனால் தற்கொலை செய்கிறேன்’ என்று எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

மீண்டும் ஜூன் 10 அன்று, சின்ச்செவாடி பகுதியைச் சேர்ந்த போபாத் ராவ் வைபாசே என்ற பாஜக தொண்டர் ஒருவர், பங்கஜா முண்டே தோல்வியால் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

நான்காவதாக, ஜூன் 16 அன்று வார்னி பகுதியைச் சேர்ந்த கணேஷ் பாடே என்ற இளைஞரும் முண்டேவின் தோல்வியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

இறந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று பங்கஜா முண்டே அஞ்சலி செலுத்தி வருகிறார்.

தற்கொலை செய்துகொண்ட பாஜக தொண்டர் போபாத் ராவ் வைபாசே குடும்பத்திற்கு நேற்று (ஜூன் 16) ஆறுதல் தெரிவிக்க வந்த பங்கஜா முண்டே அழுதுகொண்டே இருந்தார்.

பின்னர் பேசிய அவர், “இறந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு எனது வருத்தங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் இனி நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். இது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.

நாம் ஒரு தோல்வியைக் கண்டு துவழும் அளவிற்கு பலவீனமானவர்கள் கிடையாது. எதற்காகவும் உங்கள் வாழ்க்கையை விட்டுத் தராதீர்கள். துணிச்சல் மிக்கத் தலைவர் உங்களுக்கு வேண்டுமானால், எனது தொண்டர்களும் துணிச்சலுடன் இருக்க வேண்டும். தைரியமாக அதையும் எதிர்த்துப் போராடுங்கள். தோல்வி கொடுத்த வலியை விட தொண்டர்களின் இறப்பு அதிக வலியைக் கொடுக்கிறது” என்று வருத்தம் தெரிவித்தார்.

பங்கஜா முண்டே
தொடரும் ரயில் விபத்துகள்..அப்பாவி மக்களின் உயிருக்கு யார் பொறுப்பு? -ராகுல் கேள்வி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com