கடந்த 2023-ம் ஆண்டில் இந்தியா, சீனா, ஃப்ரான்ஸ், இஸ்ரேல், வடகொரியா, பாகிஸ்தான், ரஷ்யா, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் அணு ஆயுதத்திற்காக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.7.6 லட்சம் கோடி வரை செலவிட்டதாக சர்வதேச அணு ஆயுத ஒழிப்புக் கமிட்டி (ஐசிஏஎன்) அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் ஒரு நிமிடத்திற்கு ரூ.1.4 கோடியும், ஒரு நொடிக்கு ரூ.2.4 லட்சமும் உலக நாடுகள் செலவிடுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மொத்தத் தொகையில் அதிகபட்சமாக அமெரிக்கா ரூ.4 லட்சம் கோடி வரை அணு ஆயுதத்திற்கு செலவு செய்ததாகவும், இது மற்ற அனைத்து நாடுகளின் மொத்தத் தொகையை விட அதிகம் என்றும், கடந்தாண்டு மட்டும் அணு ஆயுதத்திற்கான செலவை அமெரிக்கா 80% அதிகப்படுத்தியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு அடுத்ததாக சீனா ரூ.1 லட்சம் கோடி வரை ஒதுக்கியுள்ளதாகவும், அதற்கடுத்து ரஷ்யாவும், பிரிட்டனும் தோராயமாக ரூ.70 ஆயிரம் கோடி வரை ஒதுக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதில், இந்தியா ரூ.19 ஆயிரம் கோடி வரை அணு ஆயுதத்திற்கு செலவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் ரூ.7.5 ஆயிரம் கோடி வரை செலவிட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில், அணு ஆயுதத்திற்காக உலக நாடுகளால் ரூ.32 லட்சம் கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக ஐசிஏஎன் தெரிவிக்கிறது. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் 9 நாடுகளும் நவீனமயமாக்கப்பட்டு வருவதால் அணு ஆயுதத்திற்கான செலவுகளையும் அதிகப்படுத்தி வருகின்றனர்.
அந்த அறிக்கையின் துணை ஆசிரியர்களான அலிசியா சாண்டர்ஸ் மற்றும் சாக்ரே கூறுகையில், “மனிதாபிமானமற்ற, உலகை அழிக்கும் அணு ஆயுத மேம்பாட்டுக்காக உலக நாடுகள் செலவளிக்கும் தொகையால் உலகின் பாதுகாப்பு மேம்படவில்லை, மாறாக அச்சுறுத்தலே அதிகமாகியுள்ளது” என்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அணு ஆயுதக் குறைப்பு எப்போது?

அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையை ஈரான் 4 மாதங்கள் வரை தாக்குப்பிடிக்கும்

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீது அமெரிக்கா விதித்த 10 சதவீத பரஸ்பர வரி: ரத்து செய்தது அமெரிக்க நீதிமன்றம்
ரஷிய எண்ணெய்யை வாங்கும் தடையிலிருந்து விலக்கு: மேலும் ஒரு மாதம் நீட்டித்தது அமெரிக்கா
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy




