”முஸ்லிம்கள், யாதவர்களுக்கு உதவ மாட்டேன்”: பிகார் எம்.பி.
முஸ்லிம்கள், யாதவர்களின் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என ஐக்கிய ஜனதாதளத் தலைவர் தேவேஷ் சந்திர தாக்கூர் சர்ச்சை பேச்சு


பிகாரில் உள்ள முஸ்லிம் மற்றும் யாதவ சமூகமக்கள் தனக்கு வாக்களிக்காததால், அவர்களின் கோரிக்கைகளை ஏற்கப் போவதில்லை என்று கூறியுள்ள பிகார் எம்.பி. ஐக்கிய ஜனதா தளத்தின் தேவேஷ் சந்திர தாக்கூரின் சர்ச்சையான பேச்சு பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பிகாரின் சீதாமர்ஹி தொகுதியில் ஐக்கிய ஜனதாதளத்தின் வேட்பாளர் தேவேஷ் சந்திர தாக்கூர், ராஷ்டிரிய ஜனதா தள வேட்பாளர் அர்ஜுன் ராயை எதிர்த்து 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்நிலையில், தேவேஷ் சந்திர தாக்கூர் ஒரு பொதுக்கூட்டத்தில், சீதாமர்ஹியில் உள்ள முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினர் மீதான அதிருப்தியை வெளிப்படுத்தி, பேசியுள்ள விடியோ வைரலாகி வருகிறது.
அந்த விடியோவில், அவர் பேசியுள்ளதாவது ”முஸ்லிம் மற்றும் யாதவ சமூகத்தினர் வரலாம்; தேநீர் மற்றும் தின்பண்டங்கள் சாப்பிடலாம்; பின்னர் வெளியேறலாம்; ஆனால் எந்த உதவியும் எதிர்பார்க்க வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, "முஸ்லிம் ஒருவர் என்னிடம் ஏதோ உதவி கேட்டு வந்தார். அவரிடம் ஐக்கிய ஜனதாதளத்திற்கு வாக்களித்தீர்களா என்று கேட்டேன். அவரும் இல்லையென்று ஒப்புக்கொண்டார். பின்னர், அவரை தேநீர் அருந்திவிட்டு வெளியேறுங்கள் என்று சொன்னேன். நான் உங்கள் கோரிக்கையை ஏற்க மாட்டேன் என்றும் சொன்னேன்” என்றும் கூறியுள்ளார்.
இந்த விடியோவினால் அதிருப்தியடைந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் மிருத்யுஞ்சய் திவாரி, ”ஒருவர் எம்.பி.யோ, எம்.எல்.ஏ.வோ அல்லது பிரதமராகவே இருந்தாலும், அவர் சாதி அல்லது சமூகத்திற்கு அப்பாற்பட்டவர் ஆகிறார். அவர் ஒரு தேர்தலில் வெற்றி பெறும்போது, அவர் அப்பகுதி மக்களின் பிரதிநிதியாக மாறுகிறார். தேவேஷ் சந்திர தாக்கூர் சீதாமர்ஹியின் எம்.பி.யாக உள்ளார். அவர் சாதி மற்றும் சமூகத்தை வகைப்படுத்தாமல், அனைவருக்காகவும் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும். அவரது கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும், பாஜகவின் கொள்கையான காவி மயமாக்கப்படக்கூடாது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...